பெருமாளைப் பெருமாளென வணங்கி பெரும்பாலும் பெருமாளே என்பர்
பெருமாளைத் திருமாலென வணங்கி பெரும்பாலும் திருமாலே என்பர்
பெரும் மாலோ சிறு மாலோ ஒரு மால் வேண்டி பெருமாளிடமும் வேண்டலாம்
லுலு மால் வேண்டி பெரும் மாலையைச் சூடி திருமாலிடமும் வேண்டலாம்
பெருமாளையும் திருமாலையும் மறந்து மணி வண்ணனைத் தேடியும் ஓடலாம்
கருநீலக் கண்ணனையும் மறந்து விஷ்ணுவைத் தேடிப் பாடியும் ஓடலாம்
அங்கிருந்து இங்கு வந்தாலும் இந்தக் கடவுளையும் காண முடியாது
இங்கிருந்து எங்கு ஓடினாலும் எந்தக் கடவுளையும் காண முடியாது
உண்மையுடன் உழைத்து ஒருவருக்கும் தீங்கு செய்யாதது நல்ல உள்ளம்
நல்ல உள்ளத்தில் கடவுள் இருப்பதால் எங்கிருந்தாலும் அந்த உள்ளம் துள்ளும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment