நல் மனதோடு வாழ வேண்டும்
கல் மனதோடு வாழ வேண்டாம்
பொன் மனதோடு வாழ வேண்டும்
புண் மனதோடு வாழ வேண்டாம்
இரக்க மனதோடு வாழ வேண்டும்
அரக்க மனதோடு வாழ வேண்டாம்
மறக்கும் மனதோடு வாழ வேண்டும்
துறக்கும் மனதோடு வாழ வேண்டாம்
துடிக்கும் மனதோடு வாழ வேண்டும்
இடிக்கும் மனதோடு வாழ வேண்டாம்
படிக்கும் மனதோடு வாழ வேண்டும்
கடிக்கும் மனதோடு வாழ வேண்டாம்
கொடுக்கும் மனதோடு வாழ வேண்டும்
கெடுக்கும் மனதோடு வாழ வேண்டாம்
இனமான மனதோடு வாழ வேண்டும்
கனமான மனதோடு வாழ வேண்டாம்
தன்மான மனதோடு வாழ வேண்டும்
சன்மான மனதோடு வாழ வேண்டாம்
சமாதானத்தால் சேர்ந்து வாழ வேண்டும் சனாதனத்தால் பிரிந்து வாழ வேண்டாம்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment