அப்பாடியின் தீபாவளி (3...)
தினந்தோறும் கொஞ்சம் கண்டிப்போடு இருப்பார் எங்கள் தையல் அம்மாயி
தீபாவளியன்று நிறைய இனிப்போடு இருப்பார் எங்கள் தையல் அம்மாயி
உயரமான உருவத்தோடு இருந்து
இனிமையான உள்ளத்தோடு இருந்தவர்
தீபாவளியன்று அமைதியோடு இருந்து
இன்று நீங்கா நினைவில் இருப்பவர் வைத்திலிங்கம் எனும் மாணிக்கம் தாத்தா
நடப்பது ஓடுவதைப் போல் இருந்தால்
பேசுவது பாடுவதைப் போல் இருக்கும்
தீபாவளியன்று ஒளியும் ஒலியும் சேர்ந்து மத்தாப்பு சிரிப்பதைப் போல் கேட்கும்
பூரிப்பு புன்னகை ஒன்றாகச் சேர்ந்து மாணிக்கம் அம்மாயி இருக்குமிடம் சிரிப்பின் சிறப்போடு வெடிக்கும்
அங்கே ஆர்வத்தோடும் துடிப்போடும் வெடியை வெடிப்பான் அப்பாடி!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment