Tuesday, 20 July 2021

மண்ணின் மணல்

 

மண்ணின் மணல்

மண்ணை அள்ளுவதில் கொள்கைக் கொண்டார்                                                                    கொள்ளை அடிப்பதிலும் கொள்கைக்                  கொண்டார்

அள்ளுவதோ அளவில்லா அளவில் மணல் அள்ளியளவும் அள்ளாதளவும் அங்கே அவ்வளவும் மணல்

மலை உடைந்து உருமாறிய ஆற்று மணல்    நிலைமாறி நீரோடு கலந்த ஊற்றுமணல்

பொன் விளையும் மண் அக்கால பழமொழி மண்ணேதான் பொன் இக்கால புதுமொழி

மனிதனின் வண்டியில் ஊர்வலமாய் மண்    ஊர்வல ஊர்தியில் இறுதியில் மனிதனும் மண்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment