புலியின் தனிச் சிறப்பு
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலிக்குப் பிறந்தது பூனை ஆகாதாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலிப் படத்தோடு சோழர் கொடியாம்; புலிக்குக் கிடைத்த தனிச் சிறப்பாம் அது
புலி வேகமாக நீரில் நீந்திக் கடக்குமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலி உறுமல் மூன்று மைல் கேட்குமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலி வேகத்துடன் தொடர்ந்து ஓடுமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலியில் எடை குறைந்தது பெண்ணாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது
புலி முப்பதடி வரை தாவிப் பாயுமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment