சுகமான சுமை
கூடை மேலே குடத்தோடு வாளி; குடம் சூழ குடும்பத்தோடு வாழி குடத்தை விற்றாலும் கோடி வராது; தேடி சிரித்தாலும் உம் சிரிப்பு வராது
உள்ளதைக் கொண்டு நல் வாழ்வு; குடத்தோடு வாளியால் நல வாழ்வு ஏக்கம் இல்லாத தூக்க வாழ்வு; தயக்கம் இல்லாது தூக்கும் வாழ்வு
இரக்கம் கொண்டு இறக்க வாரீர்; இறக்கிய பின் ஏற்றவும் வாரீர் ஏற்றம் கண்டு இன்புற்று வாழ்க; மாற்றம் கண்டு மகிழ்வோடு வாழ்க!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment