Thursday, 29 July 2021

படித்த மேதை அம்பேத்கர்

 

படித்த மேதை அம்பேத்கர்

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்; சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம்            பயின்றதெல்லாம் அயல் நாட்டில்; சேவையெல்லாம் பிறந்த நாட்டில்

அறிவோடு அரசியலமைப்புத் தந்தார்; உரிமைக்கு கட்டமைப்புத் தந்தார் மேதைகளுக்கு எல்லாம் மாமேதை; அரசியல் செய்யாத அரசியல் மேதை

பயனில்லா பதவியை அவர் எறிந்தார்; சுயநல மானிடரும் அவரை மறந்தார்      சமூகம் நீதிபெற அரும்பாடு பட்டார்; சமூகத்தால் பொறுப்பற்று தோற்கடிக்கப் பட்டார்

மாற்ற நினைத்த அவருக்கு ஏமாற்றம்; மாறா மானிடருக்கே அது ஏமாற்றம்                                  நிலவரம் அறிந்து துறவறம் பூண்டார்; சிலையாக மாறி நிரந்தரம் கெண்டார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment