இயற்கைதான் வெல்லும்
ஐந்து வகை நிலங்கள் ஆங்காங்கே இருந்து பூமி செழித்தது இயற்கை ஐந்து வகை நிலத்தையும் நினைத்த இடத்தில் வடிவமைத்தது செயற்கை
கிணற்று நீரை இறைத்து மண் பானையில் வைத்துக் குடித்தது இயற்கை ஆழ் துளையிட்டு நீரை நெகிழியில் அடைத்துக் குடிப்பது செயற்கை
நடந்தே சென்று மெய் வருந்த உழைத்து செழித்து வாழ்ந்தது இயற்கை உட்கார்ந்தே பெருத்து நோய் வந்து இளைத்து வீழ்ந்தது செயற்கை
மதம் மாறாமல் மதம் பிடிக்காமல் மேதைபோல் வாழ்வது இயற்கை மதம் மாறி மதம் பிடித்த போதையால் பேதைபோல் வாழ்வது செயற்கை
மலையெல்லாம் கடலாக கடலெல்லாம் மலையாக நிலம் மாறுவது இயற்கை நிலம் நீர் காற்றை நாசம் செய்து நாசமாக்கி மனிதன் மாற்றுவது செயற்கை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment