மண்ணின் மகிமை
வளமான வண்டலும் இங்குண்டு; செம்மண் செழுமையும் இங்குண்டு
கருமையான கரிசலும் இங்குண்டு; பானையாகும் களியும் இங்குண்டு
மண்ணை வெட்டிக் குவிக்காதீர்; மண்ணைக் கூட்டி விற்காதீர்
மண்ணின் வளத்தைத் திருடாதீர்; மண்ணின் மாண்பை மறக்காதீர்
விவசாயித் தொழிலை அழிக்காதீர்; மண்ணின் மைந்தனை சீண்டாதீர்
மூவேந்தர்களின் வீரமிகு மண்; வளங்களின் வீரியமிகு மண்
உயிருக்கும் மேலான தன்மான மண்; தரணியில் உயர்வான தமிழ் மண்
தமிழ் மண்ணை வீழ்த்த முடியாது; வீழ்த்த நினைத்தால் வாழ முடியாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment