Friday, 30 July 2021

வள்ளலார் பரம்பரை

 

வள்ளலார் பரம்பரை

வாடியப் பயிரில் வாடும் மனிதா            வடலூரார் வழியில் வந்த மனிதா

ஓர் இரவில் நகரமும் மூழ்கலாம்                        மறு இரவில் பயிரகமும் துளிரலாம்

பொருக்குதான் உனக்குப் பஞ்சு மெத்தை        அது கொடுக்கும் உனக்கு மெல்ல சுகத்தை

மனம் கரைந்துக் கண்ணீர் வழியும்            மேகம் கரைந்துத் தண்ணீர்ப் பொழியும்

கண்மாய் ஏரி நீரால் நிறையும்                            பசி பட்டினி விரைவில் குறையும்

ஆண்டுதோறும்  மழைப் பொழியணும்              உழைப்பவர் உயர்வோடு வாழணும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment