Saturday, 24 July 2021

எங்கும இருப்பதும் நீரே

 

எங்கு இருப்பதும் நீரே

துளியாய் இருப்பதும் நீரே துளியினுள் இருப்பதும் நீரே

வெள்ளத்தில் இருப்பதும் நீரே உள்ளத்தில் இருப்பதும் நீரே

காற்றினில் இருப்பதும் நீரே கார்முகிலினில் இருப்பதும் நீரே

மழையினுள் இருப்பதும் நீரே மலையினுள் இருப்பதும் நீரே

உடலில் இருப்பதும் நீரே கடலில் இருப்பதும் நீரே

சேற்றில் இருப்பதும் நீரே சோற்றில் இருப்பதும் நீரே

ஆற்றில் இருப்பதும் நீரே ஊற்றில் இருப்பதும் நீரே

தண்ணீரில் இருப்பதும் நீரே கண்ணீரில் இருப்பதும் நீரே

ஏரியில் இருப்பதும் நீரே அருவியில் இருப்பதும் நீரே

இளநீரில் இருப்பதும் நீரே குளநீரில் இருப்பதும் நீரே

இங்கும் இருப்பதும் நீரே எங்கும் இருப்பதும் நீரே

பயிரைக் காப்பதும் நீரே உயிரைக் காப்பதும் நீரே!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment