Friday, 23 July 2021

அறுபதாவது திருமணங்கள்

 

அறுபதாவது திருமணங்கள்

அப்போ ஆயிரம் ஆசைகளோடு அந்த நாள் இப்போ ஆயிரம் அசைகளோடு இந்த நாள்

அப்போ கூட்டுக் குடும்ப வாழ்வு அந்த நாள் இப்போ குருவிக் கூடு வாழ்வு இந்த நாள்

அப்போ பழக்கமில்லா இளங்கிளி இடப்புறம்  இப்போ பழகிப்போன பைங்கிளி வலப்புறம்

அப்போ கையோடு கை உரசும் மணவறை இப்போ தோள் மீது கை போடும் மணவறை

அப்போ கூச்சம் நிறைந்தத் திருமணம் இப்போ கூச்சம் மறைந்தத் திருமணம்

அப்போ இருமனம் இணைந்தத் திருமணம் இப்போ ஒருமனமாகி நடந்தத் திருமணம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment