Thursday, 22 July 2021

அப்பாவின் பாட்டு

 

அப்பாவின் பாட்டு

நான் பெறா கல்விதனை நீ பெற வேண்டும்; கஷ்டமில்லா வாழ்க்கைதனை நீ பெற வேண்டும்

உன்னைப் பார்த்து ஊர் மக்கள் புகழ்ந்திட வேண்டும்; உன்னோடு உன் car-ல் நான் செல்ல வேண்டும்

அம்மாவுக்கு நகை வாங்கி நீ தர வேண்டும்; என் கையாலே அதைச் சூடி நான் மகிழ வேண்டும்

பொன்னோடும் பொருளோடும் நீ வாழ வேண்டும்; பேரோடும் புகழோடும் நீ வாழ வேண்டும்

நான் பட்டக் கஷ்டங்கள் நீ பட வேண்டாம்; நீ படும் கஷ்டங்கள் என் பேரன் படவே  வேண்டாம்

நேர்மையை ஒரு நாளும் நீ மறக்க வேண்டாம்; கர்வத்தை ஒருபோதும் நீ பெறவே வேண்டாம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment