எத்தனைக் காலம்?
பாஸ்பரஸ் உடல் உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?
மலத்தை அள்ளும் உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?
அரை வயிரோடு உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?
வேலையே இல்லா உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?
பிச்சை எடுக்கும் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?
கடத்தப்படும் இளம் பிள்ளைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?
அதிகளவு அனாதைக் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?
பாலியல் பலியில் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?
ஆண்டுதோரும் இதே நிலை; என்ன மாதிரி மாற்றம் இது?
ஆளுக்காளு அயோக்கிய நிலை; என்ன மாதிரி மாற்றம் இது!
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்; என்ன மாதிரி மாற்றம் அது?
ரொம்பவே மாறிவிட்டோம் என்பார்; மாறி மாறி மாறாத மாற்றமா அது?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment