திருத்தியதா கும்பகோணம்?
பாதுகாப்பு இல்லாமல் பள்ளியைக் கட்டியது நியாயமா?
பாதுகாப்பற்ற பள்ளிக்கு அனுமதி கொடுத்தது நியாயமா?
படிக்க வேண்டுமென பள்ளிக்குச் சென்றது பாவமா?
படிப்பையும் வியாபாரமாக்கியது சமுதாயத்திற்கு சாபமா?
கடவுளை வணங்கியவர் இறந்தது விதியின் சதியா?
பகுத்தறிவிற்கு இணங்கியவர் இறந்தது மதியின் கதியா?
பிறந்தவுடன் ஜாதகம் எழுதி வயதை 80 என கணித்தார் ஜோசியர்
குழந்தை இறந்ததும் பகவான் செயல் என சடங்கு செய்தார் ஜோசியர்
பலவற்றைப் பற்றி பகுத்தறிவாளரின் அரங்கப் பேச்சு
குழந்தைகள் இறந்த பின் மௌனமான இரங்கல் பேச்சு
இறந்த பிள்ளைகளுக்கு நினைவுப் பூமாலை தந்திடுமா பயன்?
இருக்கும் பிள்ளைகளுக்கு தரமற்றப் பாதுகாப்பு தந்திடுமா பயன்?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment