சுயத்தில் சோறு
விதைத்து விளைவித்த ஆக்கக்காரர் சேற்றின் சோற்றின் உரிமைக்காரர்
தன் வியர்வைப் பார்த்து அயர்வடையார் அடுத்தவர் உயர்வைப் பார்த்து தொய்வடையார்
வயலெல்லாம் வீடாய் மாறிப் போவதேன்? பயலெல்லாம் பட்டணம் ஓடிப் போவதேன்?
பிடித்தால் பெரும் வெள்ளத்தின் அடி அடித்தால் கடும் வறட்சியின் பிடி
கஷ்டமாயினும் களனிக் கஞ்சியின் சுவை சிறிதா? இஷ்டமாயினும் கடன் அட்டையின் pizza பெரிதா?
முண்டாசுக் கட்டி தலை நிமிர்ந்து நடப்பது சிறிதா? Tie கட்டி தலைக் குணிந்து பம்முவது பெரிதா?
தொழிலாளித் தொழிலை முதலாளி தடுப்பது சரியா? முதலாளித் தொழிலில் தொழிலாளி தவிப்பதும் சரியா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment