படிப்பால் உயரலாம்
படித்தப் படிப்பால் உயர்ந்து வாழலாம் படித்துக் கொண்டே மேலும் உயரலாம்
படித்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு படிப்பவருக்கு செல்லப் போகும் இடமெல்லாம் சிறப்பு
எப்படியும் படிக்கலாம் என்போர் எப்படிப் படிப்பார்? இப்படித்தான் படிக்கணும் என்போர் அப்படியேப் படிப்பார்
அப்படிப் படித்த எப்படிப்பும் எப்படியும் நற்படி அளக்கும் எப்படிப்புப் படித்தாலும் அப்படிப்பு தக்கப்படி அளக்கும்
ஏட்டுப் படிப்போடு கேட்டுப் படித்தால் முழுமை அடையும் படிப்பு ஏழெட்டுப் பட்டம் பெற்றாலும் அதுவும் முழுமை அடையாப் படிப்பு
படித்தப் படிப்பிற்கேற்ற தெளிவான மனம் வேண்டும் பறக்கும் பறவையைப் போன்ற பரந்த மனம் வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment