Saturday, 31 July 2021

மனித உரிமைகளுக்கும் ஒரே ஒரு தினம்!

 

மனித உரிமைகளுக்கும் ஒரே ஒரு தினம்!

உரிமையைப் பறிப்பதும் மனிதனே உரிமையை மறுப்பதும் மனிதனே

உரிமைக்காக மனிதப் போராட்டம் உரிமைக்காக மறியல் போராட்டம்

சட்டம் போடுவதும் மனிதனே                        சத்தம் போடுவதும் மனிதனே

திட்டம் போடுவதும் மனிதனே            திட்டத்தோடு திருடுவதும் மனிதனே

தனி மனிதக் கடமை என்னானது?                  தனி மனித ஒழுங்கு என்னானது?

தனி மனித கர்வம் அதிகமானதேன்?          தனி மனித ஆசை அதிகமானதேன்?

ஆறாவது அறிவுதான் ஆபத்தானதா?        அதே அறிவுதான் அபத்தமானதா?

மாற்றம் ஒன்றுதானே மாறாதது?            இன்றே மாறுவோம் மனிதர்களாக!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment