பட்டம் பல வகை
படித்த எல்லோரும் படிப்பைப் படித்து பட்டத்தை வாங்கியவருமில்லை பட்டத்தை வாங்கியோர் எல்லோரும் படிப்பைப் படித்தவருமில்லை
பணம் போட்டு பணம் பெருக்க பலர் திட்டத்துடன் பட்டம் படிப்பைப் போட்டு பணத்தைப் பார்க்க சிலர் பதட்டத்துடன் பட்டம்
மருத்துவர் பிள்ளையை என்றென்றும் மருத்துவர் ஆக்குவதுதான் திட்டம் அரசியல்வாதி பிள்ளையை என்றென்றும் அரசியல்வாதி ஆக்குவதுதான் திட்டம்
உழைத்துப் பிழைப்போர் என்றென்றும் ஏக்கத்தோடு படிக்கின்றார் ஏய்த்துப் பிழைப்போர் என்றென்றும் ஊக்கத்தோடு படிக்கின்றார்
கசடற கல்வியைக் கற்றால் கற்றக் கல்வி கற்றவரை கைவிடாதுக் காக்கும் கசடற்றுக் கற்றவரின் நற்கல்வி கற்றவரோடு மற்ற சுற்றாரையும் காக்கும்
நாடு விட்டு நாடு சென்றுக் கற்றாலும் நற் கல்வியைக் கற்க முயல வேண்டும் கற்றபின் பற்று விடாது பிறந்த நாட்டைக் காக்க கற்றதன் மூலம் முயல வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment