அருமையான ஐந்தாம் அறிவு
கோழி
முட்டைப் போட்டு அடைக் காக்க தனியிடம் பார்க்கும்
போராடி போரிட்டு பருந்துதிடமிருந்து குஞ்சைக் காக்கும்
பாம்பிடம் கொத்திப் போராடும் மனிதனிடம் கத்திப் போராடும்
பசு
ஈன்ற கன்றை கண்போல் காக்கும் கத்தினால் ஓடோடிப் பார்க்கும்
பாலூட்டி சீராட்டி கன்றைக் காக்கும் பகைவரை விரட்டி முட்டித் தாக்கும்
பசி மறந்து கன்றைக் காக்கும் பால் தந்து ஏழ்மையைப் போக்கும்
குயில்
கூடு கட்டத் தெரியாக் குயில் கூடி வாழ தெரிந்தக் குயில்
மனம் மகிழும் குயிலின் குரல் கேட்டு கூவினால் அதுதான் காதல் பாட்டு
புறா
சாதகம் பார்த்து சோடி சேரும் புறா பாதகம் செய்து பிரியா பாசப் புறா
அடைக் காக்க உதவும் ஆண் புறா கடைசிவரை நல்லறம் பேணும் புறா
மனிதன்
பகுத்தறிவு மிக்கது மனித இனம் பகுத்தறிந்து வாழணும் அந்த இனம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment