Wednesday, 14 July 2021

வயது கற்பிக்கும் பாடம்

 

வயது கற்பிக்கும் பாடம்

இளையர்களுக்கு முதியவர்களின் அனுபவம் இருந்ததுமில்லை

முதியவர்களுக்கு இளையர்களின் அனுமானம் புரிந்ததுமில்லை

புவியில் பிறந்தவர் யாவரும் நல்லவராய் வாழ்ந்ததுமில்லை

புவியில் இறந்தவர் யாவரும் வல்லவராய் இறந்ததுமில்லை

உடல் வளர்ச்சி மட்டும் பார்த்தோர் அறிவு வளர்ச்சியுடன் வாழ்ந்ததுமில்லை

அறிவு வளர்ச்சி மட்டும் பார்த்தோர் உடல் நலத்துடன் வாழ்ந்ததுமில்லை

பிறந்தபோது பிறந்ததை எண்ணி சத்தமாக அழாமல் பிறந்ததுமில்லை

இறக்கும்போது வாழ்ந்ததை எண்ணி அமைதியாக அழாமல் இறந்ததுமில்லை

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment