பூகோளம்
தட்டை ஆனால் இது உருண்டை உருண்டை ஆனால் இது கோளம்
தட்டையாய்த் தோன்றும் கோளம் எல்லா எடையும் தாங்கும் கோளம்
பூமியில் பிறந்து பூமியில் அடக்கம் அடக்கமான பூமிக்குள் அடக்கம்
இயற்கை பூமியில் ஏற்ற இறக்கம் மாயை உலகில் இல்லை இரக்கம்
பூமியின் ஈரத்தால் வாழுது தாவரம் நெஞ்சின் ஈரத்தால் வாழ்வது மாவரம்
அத்தனை உயிரையும் காக்கும் பூமி மானிடர் வாழ நல்வழி காமி
பட்டினி இல்லா பூலோகமே வருக நிரந்தர மகிழ்வுடன் நிம்மதி தருக
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment