உப்பில் அறிவியல்
உப்பில்லா பண்டம் குப்பையிலே அறிவியல் இல்லா உப்பு கடலிலே
குறிஞ்சியில் இனிக்கும் ஊற்று நீரே நெய்தலில் கரிக்கும் உப்பு நீரே
அவரவர் உழைப்பில் அவர் பெரியவர் உப்பள உழைப்பில் இவர் பெரியவர்
பிரியாணி முழுமை பெறுது உப்பால் பிரிய உணவு சுவை பெறுது உப்பால்
கல் உப்பு வந்த இடம் கடல் தூளாகி பணம் கூட்டுவதும் கடல்
தாகம் தீர்க்கும் நீரினுள் கடவுள் நோய் தீர்க்கும் உப்பினுள் கடவுள்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை உப்பிடுபவரை உள்ளத்தில் நினை
உழைப்புக்கு ஏற்ற உயர்வு வேண்டும் அறிவியல் துணை போக வேண்டும்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment