Tuesday, 13 July 2021

உண்மைக்காக முழங்கு சங்கே!


உண்மைக்காக முழங்கு சங்கே!

உழைத்த உழைப்பில் வாழ்ந்திடு என சங்கே முழங்கு

ஏய்க்கும் பிழைப்பே போய்விடு என சங்கே முழங்கு

உண்மையான உறவே வந்திடு என சங்கே முழங்கு

பகைமைப் பாவமே போய்விடு என சங்கே முழங்கு

தன்மான மிக்க மனிதயினமே வந்திடு என சங்கே முழங்கு

அவமான வாழ்வே ஓடிப் போய்விடு என சங்கே முழங்கு

ஆறறிவோடு கலந்த அன்பான வாழ்வே வா வா என சங்கே முழங்கு

ஆணவத்தின் அவல ஆட்டமே போ போ என சங்கே முழங்கு

மனிதயின நேர்மை வாழ்வே வா வா என சங்கே முழங்கு

பிரித்தாளும் மனிதப் பதர்களே போ போ என சங்கே முழங்கு

நியாயமிகு மனித சமுதாயமே வா வா என சங்கே முழங்கு

அகங்கார ஆரவாரமே போ போ எனவும் சங்கே முழங்கு

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment