திருந்தி திறக்கலாம்
மூடினால் திறக்கச் சொல்லிப் பேச்சு திறந்தால் மூடச் சொல்லிப் பேச்சு
வாயை மூட மறுப்பது ஏன்? வாய்க்கு மூடிப் போட மறுப்பதும் ஏன்?
சுயநலவாதி பொதுநலம் பேசலாமா? கட்டுப்பாடு இல்லாமல் கத்தலாமா?
தாயைப் போல் பிள்ளை இருக்கு அப்பாவைப் போலவே அது இருக்கு
கொத்தவால் சாவடி மறந்துடிச்சா? கொத்தாய் மாண்டது மறந்துடிச்சா?
திறந்து விட்டால் மட்டும் போதுமா? திரும்ப வந்தால் தாங்க முடியுமா?
சமுதாயம் நல்ல பாடம் கற்கட்டும் பிறகு நன்றாய்ப் பாடம் நடக்கட்டும்
திறந்தவெளி கழிப்பிடம் ஒழியட்டும் சிறந்த பண்பாடு மீண்டும் ஒளிரட்டும்
இல்லார்க்கு இருப்போர் உதவட்டும் நல் வரத்தை இயற்கை வழங்கட்டும்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment