எது நிலையானது?
உடலின் நிலையும் நிலைத்ததில்லை; உலக நிலையும் நிலைத்ததில்லை
அழகு உடலும் மாறிடும் பிணமாக; பாச உணர்வும் மாறிடும் சினமாக
ஒதி பெருத்தாலும் உத்திரம் ஆகாது; உடல் பெருத்தாலும் உருப்படி ஆகாது
முகத்தைப் பார்த்து ஏமாறும் மனம்; மனதைப் பொறுத்து உருமாறும் முகம்
நொண்டியும் இல்லாதது ஆன்மா; நுடமும் இல்லாதது ஆன்மா!
கூனும் இல்லாதது ஆன்மா; குருடும் இல்லாதது ஆன்மா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment