Tuesday, 27 July 2021

காலமெல்லாம் கலாம்

 

காலமெல்லாம் கலாம்

ஏழ்மையுடன் எளிமையான இளமை வாழ்வு

தூய்மையுடன் இனிமையான முதுமை வாழ்வு

விஞ்ஞானத்துடன் விஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு

மெஞ்ஞானத்துடன் மெஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு

பெருமையுடன் இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்

பொறுமையுடன் முதியவர்களைச் சுட்டி எழுப்பினார்

நாட்டை வல்லரசாக்க பல ஏவுகணைகளைத் தந்தார்

நாட்டை வளமானதாக்க பல அரசாணைகளைத் தந்தார்

யாதும் ஊரே என்றார்; அகில உலகமும் அறிந்தது தமிழின் சிறப்பை

யாவரும் கேளிர் என்றார்; அகில உலகமும் உணர்ந்தது தமிழனின் பிறப்பை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment