எல்லாம் என்னுள் அடக்கம்
இமயமலையில் அமர்ந்திருந்தார் யோகி ஒருவர் ஏன் இந்த அவல வாழ்க்கை? வினவியவர் அயல்நாட்டுப் பயணி
உம் வாழ்வு உயர் வாழ்வோ? கேட்டார் நம் யோகி நிச்சயமென தலை நிமிர்ந்தார் பயணி!
இயம்பிடும் ஓர் உயர்வை என்றார் நம் யோகி தொலைக் காட்சி எம்மிடம் உண்டு என்றார் பயணி
தொலைவில் நடப்பதை யாமும் அறிவோம் என்றார் யோகி பிதற்றாதீர் என ஏளனித்தார் பயணி
கண் மூடித் தியானித்தார் யோகி தப்பிக்க முயற்சியோ? கேட்டவர் பயணி
உடனே உம் ஊருக்குப் போ என்றார் யோகி பயந்து விட்டீரோ என்றார் பயணி?
உம் மகள் நோயின் பிடியில் என்றார் யோகி ஏமாற்றாதீர் என்றார் அந்தப் பயணி
பாறையில் காட்சியைப் பாரும் என்றார் நம் யோகி பாறையில் தொலைக் காட்சிபோல் காட்சி
காட்சியில் படுத்தப் படுக்கையாய் பயணியின் மகள் இது எந்நாட்டு வீடென அலறினார் அப்பயணி
பாறையில் தோன்றியது எப்படி? கேட்டவர் விஞ்ஞானம் கற்றப் பயணி அதுதான் மெஞ்ஞானம் என்று புன்னகைத்தார் நம் யோகி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment