Sunday, 25 July 2021

கூட்டு வண்டி

 

கூட்டு வண்டி

அடிக்கும் வெயில் அடிக்காமல் இருக்க கூரையோடு அமைந்த வண்டி                              அடிக்கும் காற்றைத் தடுக்காமல் இருக்க திரையோடு அமைந்த வண்டி

பெண் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பயன்பட்ட வண்டி                                                      பெண் மாப்பிள்ளையை அழைத்துச் செல்லவும் பயன்பட்ட வண்டி

குடை கொண்டு நடக்க முடியாதவர் பயன்படுத்திய லேசு வண்டி                                  வட்டிக்குப் பணம் கொடுக்க முடிந்தவர் பயன்படுத்திய காசு வண்டி

துள்ளிக் குதிக்கும் காளைகளுக்குப் பொருந்தா நாட்டு வண்டி                                          துவளாமல் நடக்கும் காளைகளுக்குப் பொருந்தும் கூட்டு வண்டி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment