என் தந்தையே என ஏங்கும் நினைப்பில் கனத்த நெஞ்சோடு கண் நனைப்பேன்
வழியும் கண்ணீரோடு தொடரும் கனவில் எந்தை வந்து போவதைக் காண்பேன்
கனவோடு அழுதால் அப்பாவைக் காணலாமென கனவைக் காண்பேன்
அழாதடா அய்யாவென அழுகையோடு
அப்பாவின் அக்கறைக் குரல் ஒலிக்கும்
தூக்கம் கலைந்து எழுந்த கையோடு கண்கண்ட கனவு கண்ணைக் கரைக்கும்
என்னுள் எழுந்த என் அப்பாவின் நினைவை இப்பாவில் எழுதினேன் நான்
ஆம்பலாப்பட்டு தர்மராஜ் அவர்களின் மகன்தான் இராமநாதன் நான்
மஹாராஜ் & இராஜராஜ் இவர்களின் தந்தைதான் இராமநாதன் நான்!
- தஞ்சை த.இராமநாதன் (ஆம்பலாப்பட்டு தெற்கு, சோமன் தெரு)

அப்பாவின் மகிமை அவர் இல்லாதபோதுதான் உணர முடியும். அவர்களின் நல்லாசி எப்போதும் கிடைக்கும்.இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.👍🙏🏻🧚♂️
ReplyDelete🙏🙏
ReplyDeleteதந்தையின் காட்சிக்காய் அழுதது அழகு
ReplyDeleteகண்ணீரை அடக்கி அப்பாவை வடித்தமை அழகு.
அப்பாவின் அத்தனை எழுத்துக்களும் வார்த்தைகளும் வரிகளும் அழகோ அழகு.
இதுவரை உங்கள் வரிகளில் பார்த்திராத இன்னொரு பரிமாணம் இதுவே பரிணாமம்
மனமார்ந்த வணக்கங்கள் அண்ணோ 🙏🏼🙏🏼
🙏🤝🙏
Deleteஅப்பா நாம் பார்த்த முதல் கதாநாயகன்
ReplyDeleteஆம்பல் சிவலதா-அ.சிவஞானம்,கண்டியர்தெரு,ஆம்பல்
Delete🙏
Delete🤝
Deleteஆதியும் மூலமும் அய்யனில் அடக்கம்.
ReplyDeleteஅய்யனே என் அப்பன் ஆனால் அவன் யாரினில் அடக்கம்........
சிவ சிவ வசி வசி சிவ சிவ சிவாய
அந்த ஆதிமூலனே என் அப்பனே சிவாய 🙏🙏🙏
அனுதினம் பூதி அவனை சிவாய நம சிவாய 🙏👌
🙏🙏🙏
Deleteநெகிழ்ந்தேன் ஐயா
ReplyDelete🙏🙏
Delete