Wednesday, 19 June 2024

அவ்வாறு இவரும் இவ்வாறு அவரும்

அவ்வாறு இவரும் இவ்வாறு அவரும்

இரக்கப்பட்டதால் இறக்கப்படுவோரும் இருக்கிறார்
இறக்கப்பட்டதால் இரக்கப்படுவோரும்
இருக்கிறார்
மறுக்கப்பட்டதால் மறைக்கப்படுவோரும் இருக்கிறார்
மறைக்கப்பட்டதால் மறுக்கப்படுவோரும்  இருக்கிறார்

முடக்கப்பட்டதால் முடங்கிப்போவோரும் இருக்கிறார்
முடங்குவோரால் முடக்கப்படுவோரும்
இருக்கிறார்
அடக்கப்பட்டதால் அடங்கிப்போவோரும் இருக்கிறார்
அடங்குவோரால் அடக்கப்படுவோரும் இருக்கிறார்

கட்டுப்பட்டதால் கட்டுப்படுவோரும் இருக்கிறார்
கட்டுப்படுவோரால் கட்டுப்பட்டோரும் இருக்கிறார்
தட்டுப்பாட்டால் தட்டுத்தடுமாறுவோரும் இருக்கிறார்
தடுமாறுவோரால் தடம்மாறுவோரும் இருக்கிறார்!

- தஞ்சை த இராமநாதன்

4 comments:

  1. உண்மைதான்!! தடுமாற்றதால் தடம்மாறுவோர் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  2. சரி எவ்வாறு இருக்கவேண்டும்..அதை சொல்லவில்லையே அய்யா நான் இவ்வாறு முடித்துக்கொள்கிறேன்.வாழ்த்துகள்!

    ReplyDelete