Thursday, 20 June 2024

கள்ளக்குறிச்சியில் கள்ளக்குடி

கள்ளக்குறிச்சியில் கள்ளக்குடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை மறைந்து குடித்து மறைந்தார்களே
நல்லக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை மறந்து குடிக்காமல் இருப்பார்களா?

குடிக்கக்கூடாதெனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறாரே
குடித்துவிட்டே திருக்குறளை உளறித் தள்ளாத தமிழர்கள் இருக்கிறார்களா?

குடித்தே குடியைக் கெடுத்தவர்கள்
துடி துடித்தே இறந்தார்களே இனி
குடியால் குடியைக் கெடுப்போர்கள்    குடியைக் குடிக்காமல் இருப்பார்களா?

குடி குடியைக் கெடுக்குமெனத் தெரிந்தே
குடித்துத் துவண்டு மாண்டார்களே இனி
குடி குடியைக் கெடுத்ததுப் போதுமென  குடித்துக் கெடுவதைத் தடுப்பார்களா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment