Monday, 2 January 2023

நான் பிறந்த ஊர் ஆம்பலாப்பட்டு

 

காசாங் குளத்து குலத்தில் பிறந்து வளர்ந்த எனது ஊர் ஆம்பலாப்பட்டு                    தர்மராஜ் சிவக்கொழுந்து பெற்றெடுத்த தலைமகனான எனது ஊர் ஆம்பலாப்பட்டு

பழமையான நிலங்களில் நீர் வளம் பெற்று பணம் விளையும் ஊர் ஆம்பலாப்பட்டு            குளங்களால் சூழப்பட்டு ஏரிகளால் வளம் பெற்று சிறப்புறும் ஊர் ஆம்பலாப்பட்டு
          
நன்செய்யெனும் வயல்கள் சூழ்ந்த செழிப்பான ஊர் ஆம்பலாப்பட்டு                  புன்செய்யெனும் கொல்லைகள் சூழ்ந்த எல்லையான ஊர் ஆம்பலாப்பட்டு

ஆடு மாடு கோழி குருவிகள் எல்லாம் ஓசை எழுப்பிடும் ஊர் ஆம்பலாப்பட்டு                    கபடி பளிங்கி பந்தாட்டமென ஆடிப் பாடி விளையாடிய ஊர் ஆம்பலாப்பட்டு

பகுத்தறிவோடு ஆன்மீக அடித்தளம்    கொண்ட ஊர் ஆம்பலாப்பட்டு            பண்போடும் படிப்போடும் மேல்தளம் கண்ட ஊர் ஆம்பலாப்பட்டு

ஆம்பலெனும் அல்லி ஆவெனும் பசு  பட்டுயெனும் சிற்றூர் ஆம்பலாப்பட்டு        முல்லை நிலத்தோடு மருத நிலம் சேர்ந்த ஊர் எனது ஆம்பலாப்பட்டு!

- தஞ்சை த.இராமநாதன்

12 comments:

  1. Arumai💐🙏

    ReplyDelete
  2. Very good. பழைய நினைவுகள் என்றும் மறவாமல் இருக்கும் நண்பர் இராமநாதன். Ramasamy Manickam.

    ReplyDelete
  3. உங்ககள் கவிதை மிக அ௫மை அதில்ந பதிந்துள்ள வரிகள் நமது ஊரின பெ௫மை, வாழ்த்துகள் இராமநாதன்

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் மோகன் வைரக்கண்ணு,ஆம்பலாப்பட்டு

      Delete


  4. படித்தவரகள் பண்பானாவரகள் நிறைந்த ஊர் ஆமாலாப்பட்டு

    ReplyDelete