Sunday, 23 October 2022

ஒளிமயமான தீபாவளி

 

நமது இதயத்தில் தெய்வீக ஒளி நிறைந்தால் தெளிவான பேரானந்தம் துவங்கும் 
நமது இல்லத்தில் தீபாவளி ஒளி நிறைந்தால்  மகிழ்வான பேரின்பம் துவங்கும் 

அகவொளியால் உள்ளம் சுத்திகரிக்கப்பட்டு அகப் பொலிவோடு முகம் மிளிரும் 
புறவொளியால் இல்லம் சுத்தமாக்கப்பட்டு  முகக் களிப்போடு அகம் ஒளிரும்        

பரமானந்தத்தை நோக்க ஆழ்ந்த நிலையில் அமர்ந்தபடி அமைதியோடுத் தேடுவோம்          பாரம்பரியத்தைக் காக்க வாழ்ந்த வழியில் தீபாவளியன்று கொண்டாடக் கூடுவோம்!

- தஞ்சை த.இராமநாதன்

6 comments: