சட்டத்தின் ஆளுமையால் வளர்ந்த நாடு
குடிநீருக்கு ஊற்றற்ற ஊர் சிங்கப்பூர்
குடிநீருக்கு குறைவற்ற ஊர் சிங்கப்பூர்
விளை நிலம் குறைந்த ஊர் சிங்கப்பூர்
விலை நிலம் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
அடுக்குமாடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
கிடுக்குப்பிடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
உலகச் சந்தையை அமைத்த ஊர் சிங்ஙப்பூர்
உலகை வியப்படைய வைத்த ஊர் சிங்கப்பூர்
கடல் வளத்திற்கு உகந்த ஊர் சிங்கப்பூர் உடல் நலத்திற்கு தகுந்த ஊர் சிங்கப்பூர் சத்தம் அதிகம் இல்லாத ஊர் சிங்கப்பூர் சுத்தம் அதிகம் இருக்கும் ஊர் சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய ஊர் சிங்கப்பூர் பணத்தளவில் பெரிய ஊர் சிங்கப்பூர்!
- தஞ்சை த இராமநாதன்

உண்மையை யாராலும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. சேமிக்க சிறந்த ஊர் சிங்கப்பூர் செலவழிக்க சிறந்த ஊர் சிங்கப்பூர்
ReplyDelete👍
Delete