உயர்ந்த மனிதர்
உருவத்தில் உயர்ந்த மனிதர் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்
மக்களுக்காக வாழ்ந்த மனிதர் மக்களால் வீழ்ந்த மனிதர்
தனக்கென பணம் சேர்க்காத மனிதர் தனக்கென குணம் சேர்த்த மனிதர்
எளிய வாழ்க்கை வாழ்ந்த மனிதர் ஏழ்மை வாழ்வில் வாழ்ந்த மனிதர்
கல்விக்காக பள்ளி திறந்தார் பசியாற உணவும் தந்தார்
படிக்காமல் படிக்க வைத்தார் படிப்பினால் சிறக்க தந்தார்
சுய நலம் பேணாத மனிதர் பொது நலம் பேணிய மனிதர்
மணக்கும் மனதோடு வாழ்ந்தவர் மணக்காத வாழ்வோடு வாழ்ந்தவர்
அமைதியுடன் இருந்தத் தமிழர் வறுமையுடன் இறந்தத் தமிழர்!
- தஞ்சை த இராமநாதன்

சிறப்பு . வாழ்த்துக்கள்
ReplyDelete🤝
Delete