Wednesday, 25 March 2026

மோசமானவனா மனிதன்?

 

மோசமானவனா மனிதன்?

அத்தியாவசியமென்பதை இலவசமாக்கியதால்
இலவசமென்பதையே அத்தியாவசியமாக்கினர்

அவசியமென்பதை அநாவசியமாக்கியதால் 
அநாவசியமென்பதையே அவசியமாக்கினர்

பணத்திற்காக பாசமென்றானதால்
பாசமென்பதையே பணமாக்கினர்

மனமென்பதை மோசமாக்கியதால்
மோசமான மனிதனாக மாறினர்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. எண்சாண் கூடடிற்கு ஏற்றபடி எண்ணடி சரவெடி

    ReplyDelete