ஓயுதல் அகற்று
உழைத்து உயர வேண்டிய களத்தில் குந்தியே பிந்தி மடியாதே
உடல் ஓய்வெடுக்க விரும்பும் காலத்தில்
அயர்ந்து ஓய்வெடுக்க மறுக்காதே
ஆக்க முயற்சி திருவினை ஆக்கும் என்பதை மறந்து
சோம்பித் திரிந்து தீவினை ஆக்கி தீர்ந்து விடாதே
பசுமை செழித்து விளைந்த வேளாண்மை
வெள்ளத்தில் அழிந்தாலும்
உள்ளத்தில் அழியாத மேலாண்மை
வளமாக்கிடும் மறவாதே!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment