தமிழைப் பழித்தால் பாவம்
தமிழைக் கசடற கற்றுக்கொண்டாரின் கையிலும் நாவிலும் குதித்துக் கூத்தாட தவமாய் தவமிருக்கும் நிலையிலேயே உள்ளன வேற்று மொழிகள்
தமிழைப் படித்தால் பிச்சைகூட எடுக்க முடியாதென்று எவர் சொன்னாலும் எவரோ சொன்னதாகச் சொன்னாலும் சொன்னவர் அவனோ அவளோ அவர்கள் பாவப்பட்ட பரிதாப பரதேசிகள்
வந்தாரை எல்லாம் வாழ வைத்த தலைமைத் தமிழின் தாய் மண்ணான தமிழ்நாடே
வரப்போவோரையும் வாழ வைக்க காத்திருக்கும் தாய்த் தமிழ் திருநாடே
கொடுக்கப் பழக்கப்படுத்தி அள்ளிக் கொடுக்க வைத்த என் இன தமிழ்த் தாயே!
பழித்தால் பதிலை தக்க நேரத்தில் திருப்பிக் கொடுத்திடச் சொல்லிக் கொடுத்திட்ட தன்மானத் தமிழ்த் தாயே!
- தஞ்சை த.இராமநாதன்

👏💐
ReplyDelete🤝
Delete