சிரமேல்குடி ஸ்ரீ ராமர்
பொய்யை மெய்யாக்கி மெய்யைப் பொய்யாக்கிடும் மனிதர்களைக் கூட்டி நல்வழியைக் காட்டிடுவார் ஸ்ரீராமர்
பழமையை மறந்து புதுமையைப் புகழ்ந்து பணபோதையில் ஆட்டம் போடும் லௌகீக குண பித்தர்களை அர்த்தமுள்ள ஆன்மீக பக்தர்களாக மாற்றிடுவார் ஸ்ரீராமர்
சிரமப்பட்டோ சிரமப்படாமலோ மேல் குடி என எண்ணுவோரை சிரத்தின் மேல் குடி கொண்டு நல்குடிகளாக மாற்றித் தேற்றி நல்வழிப்படுத்துவார் நமது ஸ்ரீராமர்
பல்லாண்டுகளுக்கு முன்பாக M.P.R எனும் ராமர் பெயர் கொண்ட நல்லாரும் S.D.R எனும் ராமர் பெயர் கொண்ட நானும் வணங்கிய அந்நாளை இந்நாளில் நினைத்து உள்ளத்தின் ஒலியை ஒளியாக்கி வணங்குகிறேன் ஸ்ரீராமரே!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment