ஆதி சிவனை வணங்க இன்றும் இங்கே வாங்க
அதே சிவனை வணங்க என்றும் இங்கே வாங்க
வேற்றுமையை மறந்து ஒற்றுமையோடு வாங்க
வெறுப்புணர்வை மறந்து விருப்புணர்வோடு வாங்க
பல ஆண்டுகளாக ஓர் ஓரமாக இருந்த லிங்கம்
சில ஆண்டுகளாக ஒய்யாரமாக இருக்கும் லிங்கம்
ஆதி சிவனென என்னால் பெயரிடப்பட்ட சிவலிங்கம்
ஆதியே சிவன்தானென எந்நாளும் பெயரெடுக்க போகும் ஆதி சிவனெனும் சிவலிங்கம்!
- தஞ்சை த.இராமநாதன்
(சோமன்தெரு, காசாங்குளம்-குலத்தார்)
15 Feb 2026, Singapore

அம்பாள் பெயரையும் சூட்டவும்
ReplyDelete👍
Delete