Wednesday, 11 February 2026

புகலிடம்

புகலிடம்

எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதையெல்லாம் கொடுத்தால் கொடுத்தவரிடம் தேடி வந்து புகலிடம் தேடும் இல்லாமை

சூடும் இல்லாமல் சுரணையும் இல்லாமல் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டவனிடம் ஓடி வந்து ஒட்டிப் புகலிடம் தேடும் பொல்லாமை

கொடுத்ததால் கெட்டதாக எண்ணாத கொடுத்தவரிடம் புகழெல்லாம் கூடி வந்து சேர்ந்திடும் புகலிடம்
எடுத்ததால் வாழ்வதாக எண்ணும் எடுத்தவனிடம் இழிவெல்லாம் தேடி வந்து சேர்ந்திடும் புகலிடம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment