Tuesday, 10 February 2026

காட்டிலும்...காட்டிலும்

 

காட்டிலும்...காட்டிலும்

அறிவு ஆற்றலைக் காட்டிலும் அழகைப் பெருக்கவே அதிகம் விரும்புகிறார்கள்
ஆக்கலைக் காட்டிலும் அழித்தலைக் கூட்டவே அதிகம் விரும்புகிறார்கள்

அந்தக் காட்டிலோ இந்தக் காட்டிலோ எந்தக் காட்டில் மழை பொழிந்தாலும் காடே நிலத்தோடு தாளம் போடும்
எந்த நாட்டில் எவராக இருந்தாலும் அந்த நாட்டில் பணம் பலமாக இருந்தால் அவர் காட்டிலும் மழை சக்கைப்போடு போடும்

வீட்டைக் காட்டிலும் நாட்டைக் காட்டிலும் காட்டில்தான் தியானத்தில் ஆழ்ந்தார் அக்கால முனிவர்
உண்மையான உறவைக் காட்டிலும் போலியான உறவை நாட்டிலும் கண்டு துரோகத்தினால் வீழ்ந்தார் இக்கால மனிதர்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment