Friday, 20 February 2026

தில்லு முல்லு தள்ளி நில்லு

தில்லு முல்லு தள்ளி நில்லு

படாதபாடு பட்டாலும் பட்டபாட்டை படவிட்டு பட்டைப் போட்டு விடுவர்

விட்டு விட்டதை விடாது விட்டாலும் விடாததையும் வெட்டி விடுவர்

போட்டபடியே ஓட்டுப் போட்டதைப் போடாது போனாலும் போட்டு விடுவர்

கட்டியதைக் காட்டினால் கட்டாததைக் காட்டி கட்டியதாகக் காட்டி விடுவர்

பிடித்த வாதத்தைப் பிடிவாதமாக்கி பிடித்ததையும் பிடிக்காததாக்கி விடுவர்!

(ஓட்டு - Vote)

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment