Tuesday, 27 January 2026

கூடும் கூட்டணிகள்

கூடும் கூட்டணிகள்

கொள்கைக் கூட்டணி என்பது கொள்கையே இல்லாமல் இருந்தவர்கள்தான் போடுகிறார்கள்
கொள்ளைக் கூட்டணி என்பது கொள்ளையால் பணம் சேர்த்தவர்கள்தான் போடுகிறார்கள்

பாசம் காட்டியவர்களிடம் வேடம் போட்டுப் பாடம் கற்பித்த அயோக்கியர்கள் சேர்ந்தும் கூட்டணி போடுகிறார்கள்
உதவி செய்த உத்தமர்களை ஏமாற்றி துரோகம் செய்த நயவஞ்சகர்கள் சேர்ந்தும் கூட்டணி போடுகிறார்கள்

தேர்தலாக இருந்தாலும் மாறுதலாக இருந்தாலும்
வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும்
உறவாக இருந்தாலும் உற்றாராக இருந்தாலும்
கற்றவராக இருந்தாலும் கல்லாதவராக இருந்தாலும்
கூடும் கூட்டணிகள் இனத்தோடு இனமாக கூடிக்கொண்டேதான் செல்கின்றன!

- தஞ்சை த.இராமநாதன்


2 comments: