செல்வந்தர் செக்கிழுத்தார்
Cheque-ஐ கிழித்துக் கொடுத்தவன் எல்லாம் செல்வந்தனென ஆனான்
கப்பலை ஓட்டியவர் செக்கிழுத்து செல்லாகாசாகி இறந்து போனார்
கைகளை கால்களை ஆட்டி அசைத்து பொய்யைப் பேசுபவனை மறவோம்
கை காலைக் கட்டி தரதரவென தரையில் இழுக்கப்பட்டு இறந்தவரை மறந்தோம்
வக்கிர புத்தியோடு வாட்டி எடுத்தான் ஆங்கிலேய பிழைப்புக் கூலி மிஞ்ஜேல்
சட்டம் படித்த நமது வ.உ.சி சொன்னார் வந்தேறிகளைக் கண்டு அஞ்சேல்
சிதம்பரனாரின் சேவையை மறந்த
மனிதனிடம் தன்மானம் இருக்க முடியுமா?
தன்னிகரில்லாதவரை தன்னலத்தோடு மறந்தவனிடம் மனிதாபிமானம் இருக்க முடியுமா?
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🙏
Delete👌 ரவி சங்கர்
ReplyDelete🤝
Delete