Monday, 26 January 2026

ஆடாதது ஆடானாலும் ஆடதும் ஆடே

 


ஆடாதது ஆடானாலும் ஆடதும் ஆடே

மேடையைப் பார்த்து ஆடச் சென்றால் மேடையே ஆடும் ஆடிய ஆட்டத்தால்
பயிரைப் பார்த்து ஆடு சென்றால் பயிரோ அசைந்து ஆடும் பயத்தால்

ஆடாத பல்லை ஆட்டிப் பிடுங்கினால் ஆடிய பல்லை ஆட்டாமலே பிடுங்கலாம்
ஆடுகளத்தில் ஆட்டைத் தேடி ஓடினால் ஓடும் மாட்டை விரட்டிப் பிடிக்கலாம்

வெள்ளாடு என்றதும் வெள்ளையென நினைத்தால் கருப்பாக உள்ளது ஆடு
கருப்பாடு என்றதும் கருப்பேயென நினைத்தால் மந்தையில் செம்மறி ஆடு

ஆடு பாம்பே என ஊதினால் ஆடவே முடியாத பாம்பும் தலையை ஆட்டுது                    விளையாடு பாம்பே என ஆடினால் ஆடுவதுபோல் விளையாட்டுக் காட்டுது!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment