Friday, 16 January 2026

அர்த்தமுள்ள எங்கள் பொங்கல்

 

அர்த்தமுள்ள எங்கள் பொங்கல்

வேண்டாததை விட்டொழிக்கச் சேர்த்து எடுத்து எரித்து
வேளாண்மையைக் காத்து ஒளி தந்த கதிரவனைத் துதித்து
காலமெல்லாம் உழைக்கும் மாடுகளைப் போற்றி மதித்து
உறவோடும் நட்போடும் கண்டு களித்து உண்டு திளைத்து
பரிசுத்த மனமிகு பாரம்பரிய பரம்பரை  வாழ்ந்திடுமே தழைத்து!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: