Wednesday, 14 January 2026

எங்கெங்கும் பொங்கலோ பொங்கல்

 

எங்கெங்கும் பொங்கலோ பொங்கல்

அழகான அடுக்குமாடிக் கட்டிடத்தில் தோகையோடு கரும்பைச் சேர்த்துக் கட்டி
Balcony-க்கு முன்பாக படையல் இட்டு
பரபரப்பு இல்லாத பக்குவப் பொங்கல் சிங்கப்பூரில் நடந்தாலும்

போகியன்றே திரெளபதி அம்மனுக்குப் பொங்கலிட்டு
பொங்கலன்று வாசலில் வெண் பொங்கல் சர்க்கரைப் பொங்கலிட்டு
மாட்டை மாட்டுப் பொங்கலன்று கேணாங் குளத்து நீரில் அடித்து
காணும் பொங்கலைக் காமனடியில் கொண்டாடுவதைக் காண விருப்பினாலும்

வாடா ஐயாவென அழைத்துக் கொண்டாட அப்பா இல்லாததால் எங்கிருந்தாலும் ஒன்றுதான் பொங்கலோ பொங்கல்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment