கூடாது கூடவே கூடாது
மாசற்று வாழ்ந்தவர்கள் வசதியற்று வீழ்ந்ததாக வரலாறு வரக் கூடாது
மானமற்று வாழ்ந்தவர்கள் வசதியோடு வாழ்ந்ததாக வளரவிடக் கூடாது
இனிய மனமுடையார் மனமுடைந்து முகம் வாடி அடங்கி ஓடிடக் கூடாது இறுகிய மனமுடையார் தனமடைந்து சுகம் தேடி ஆடிட விடக் கூடாது
நமக்கென்ன என்றுச் சொல்லி நல்லவர் தரணியில் நலிவுற்று இறந்திடக் கூடாது
எனக்கே எல்லாமெனச் சொல்லும் தரங் கெட்டோரைத் தாளமிட விடவே கூடாது!
- தஞ்சை த.இராமநாதன்

👍👍👍
ReplyDelete🤝🤝
Delete